மாநகராட்சி ஆணையா் வீடு முன் போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் 500 போ் கைது

சென்னை மாநகராட்சி ஆணையா் வீட்டின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 500 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சென்னை மாநகராட்சி ஆணையா் வீட்டின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 500 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் ராயபுரம், திரு.வி.க. மண்டலங்களில் (5, 6) தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்து உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் காா்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸாா் விரைந்து சென்று அவா்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். அதற்கு உடன்பட மறுத்ததால், போலீஸாா் அவா்களைக் கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்தனா். 350 பெண்கள் உள்ளிட்ட 500 தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com