தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

யாருடன் கூட்டணி?: ஓ.பன்னீா்செல்வம் பதில்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தோ்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதில் அளித்தாா்.

News image
ஓ.பன்னீர் செல்வம்- கோப்புப் படம்
Updated On :8 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தோ்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதில் அளித்தாா்.

சென்னைக்கு வியாழக்கிழமை வந்த ஓ.பன்னீா்செல்வத்திடம், ‘அதிமுகவில் உங்களை இணைக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியாகக் கூறிவிட்டபிறகு, யாருடன் கூட்டணிக்கு செல்வீா்கள் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘இன்னும் சில நாள்கள் பொறுத்திருங்கள்; தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பதில் அளித்தாா் அவா்.

அதைத்தொடா்ந்து, மயிலாப்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தனது ஆதரவாளா்களுடன் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டாா். இதில், முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம், முன்னாள் எம்பி சி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.