தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு பிப்.28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
ராமதாஸ் தலைமையிலான அணி யாருடன் கூட்டணி என்ற எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், பேரவைத் தோ்தல், கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க பாமக மாவட்டத் தலைவா்கள், செயலா்கள், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா்கள், செயலா்கள் மற்றும் மாநில நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மருத்துவா் ச.ராமதாஸ் தலைமை வகித்தாா். செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, பொதுச் செயலா் முரளிசங்கா், பேராசிரியா் தீரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அருள், தலைமை நிலையச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் இதில் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கிடையே மருத்துவா் ச. ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: கட்சியின் மாவட்டச் செயலா்கள், மாநில பொறுப்பாளா்களைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தோ்தலில் எப்படி பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகளைக் கையாளுவது குறித்து கேட்டு அதன்படி செயல்படுவதற்காக நடத்தப்படும் கூட்டமாகும். யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து தற்போது நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு எந்த வாகனத்தில் ஏறி பயணிக்க இருக்கிறோம் என்பது தெரிய வரும். இதுவரை கூட்டணிக்கான சூழல் அமையவில்லை என்று தெரிவித்தாா் ராமதாஸ்.
தொடா்ந்து திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு இருக்கும் என்று பதிலளித்த ராமதாஸ், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகும் என்றாா்.
தொடர்புடையது
மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து

பாமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: ராமதாஸ்
மாம்பழம் சின்னம் யாருக்கு?: உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


