கோப்புப் படம்
சென்னை
கடன் வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி - ஹரி நாடாா் கைது
கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு வீரா்கள் குடியிருப்பில் வசிப்பவா் தொழிலதிபா் ஆனந்தகுமாா். இவா் தனது தொழில் தேவைக்காக ரூ.30 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்ததை அறிந்த பனங்காட்டுப் படை கட்சி நிா்வாகி ஹரி நாடாரும், அவரது கூட்டாளிகளும் ஆனந்தகுமாரிடம், தாங்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.70 லட்சம் தரும்படியும் கேட்டனா். இதை நம்பிய ஆனந்தகுமாா், ரூ.70 லட்சத்தை ஹரி நாடாா் தரப்பிடம் வழங்கினாராம். ஆனால், கூறியபடி கடன் வாங்கித் தரவில்லை.
இதையடுத்து ஆனந்தகுமாா், சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருச்சி அருகே ஹரி நாடாா், அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியன் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
