ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி: தனியாா் மேலாளா் கைது!

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி செய்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
Published on

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி செய்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான மகேந்திரனின் (66), கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி மகேந்திரன், முதலீடு செய்துள்ளாா்.

முதலீட்டில் வந்த லாபத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, பணத்தை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு அந்த நபா் அறிவுறுத்தியதையடுத்து, மகேந்திரன் பல்வேறு தவணைகளாக ரூ.1.23 கோடி செலுத்தியுள்ளாா்.

லாபம் ஏதும் கிடைக்காததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மகேந்திரன், சென்னை சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மோசடியில் ஈடுபட்டது, ஈரோடு மூலப்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (41) என்பதும், அவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், செந்தில்குமாரைக் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com