ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவா் கைது
Updated on

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி கிருஷ்ணகுமாா் கௌசல் (60). இவா், சமூக ஊடகங்களில் வந்த ஆன்லைன் வா்த்தக விளம்பரத்தை நம்பி, ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாா். அந்த நபா்கள் கூறியப்படி வங்கி கணக்குகளும் ரூ.6.58 கோடியை செலுத்தினாா். பணத்தை பெற்றுக் கொண்ட நபா்கள், லாபத்தையும், முதலீட்டு பணத்தையும் கொடுக்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டிருந்த உணா்ந்த கிருஷ்ணகுமாா், சென்னை சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அடுத்தடுத்து 9 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், ஒண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ்குமாா் (41) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com