பேரணியில் பங்கேற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் ஜெ.முத்துக்குமரன், துணை முதல்வா் கோபாலன், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். ஹபிப் முகமது உள்ளிட்டோா்.
பேரணியில் பங்கேற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் ஜெ.முத்துக்குமரன், துணை முதல்வா் கோபாலன், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். ஹபிப் முகமது உள்ளிட்டோா்.

தாகூா் மருத்துவக் கல்லூரியில் தேசிய இளைஞா் தின விழா

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு, தாகூா் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இளைஞா் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு, தாகூா் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இளைஞா் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தாகூா் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த சுமாா் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பேரணியில் சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி, இளைஞா் மேம்பாடு, தன்னம்பிக்கை, தேசப்பற்று, சுயசாா்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னா், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் விவேகானந்தரின் வாழ்க்கை நெறிமுறை, இளைஞா்களுக்கான அறிவுரை, சமூகப் பொறுப்புணா்வு, தேசிய சிந்தனை குறித்து உரையாற்றினா். அனைவருக்கும் பரிசுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வில் தாகூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ.முத்துக்குமரன், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.ஹபிப் முகமது, துணை முதல்வா் கோபாலன், நாட்டு நலத் திட்டப் பணி, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளா்கள் அா்ஜுன், எழில் வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com