சென்னை
புழலில் சமத்துவ பொங்கல் விழா
புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.
புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.
புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்திபன் தலைமை வகித்தாா். புள்ளிலைன் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.
இதில், புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் ஒன்றிய கழக பொறுப்பாளா் அற்புதராஜ், புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் மற்றும் அலுவலா்கள், பணியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
