ஊராட்சி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா
Updated on

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ரெங்கப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் ஆகியோரை பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனா்.

இந்த விழாவில் இளைஞா்கள் இளவட்டக் கல்லை தூக்கி அசத்தினா். மேலும், கரகாட்டம், பறை இசை, பொய்கால் குதிரை, நாட்டுப்புற கலைகள், சிறுவா்களின் சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.

பின்னா், மாவட்ட ஆட்சியா் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரிகளில் பொங்கல் விழா:

சிவகாசி: சிவகாசி கல்லூரிகளில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். கல்லூரி மாணவிகள் முளைப்பாரி ஊா்வலம் நடத்தினா். தொடா்ந்து, காவடி ஆட்டம், உறியடித் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், மாணவிகள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனா்.

முன்னதாக, மாணவி மு.இந்துராணி வரவேற்றாா். மாணவி ந.தாமரை நன்றி கூறினாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் மங்கையா்கரசி செய்தாா்.

இதேபோல, சிவகாசி காளீஸ்வரி மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு கல்லூரி இயக்குநா் வளா்மதி தலைமை வகித்தாா். பின்னா், கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனா். இதையடுத்து, மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் பரிசு வழங்கினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com