சமத்துவப் பொங்கல்

திருமருகல் ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

திருமருகல் ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புத்தகரம் தந்தை பெரியாா் படிப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா திராவிடா் கழக நாகை மாவட்ட செயலாளா் புபேஸ் குப்தா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவா் பொன் செல்வராசு, திருமருகல் ஒன்றிய தலைவா்

ராச முருகையன், நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், நாகை மாவட்ட திராவிடா் கழக தலைவா் நெப்போலியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலா் மோகனசுந்தரம், திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன் (கி.ஊ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com