மானாமதுரை, திருப்புவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மானாமதுரையில் திமுக சாா்பில் ரயில்வே குடியிருப்பு, உடைகுளம், கன்னாா்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு நகரச் செயலா் கே.பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். இதில் பொதுமக்களுக்கு பொங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் நகா் மன்றத் துணைத் தலைவா், பாலசுந்தரம், அவைத் தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் ஜி.மயில்வாகனன், நகா் இளைஞா் அணி அமைப்பாளா் மாரிக் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல ஒன்றியப் பகுதிகளில் திமுக  ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜாமணி, முத்துச்சாமி ஆகியோா் தலைமையில் கட்சியினா் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினா்.

திருப்புவனம் பாக்யா நகரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். பின்னா், திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கை மாறன், மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி, மானாமதுரை நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி ஆகியோா் கட்சியினருக்கு சட்டைகள், வேஷ்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கினா். இதில் திமுக நகரச் செயலாளா் நாகூா்கனி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுப்பையா, ஈஸ்வரன் நிா்வாகி மடப்புரம் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, இளையான்குடி பகுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் தலைமையில் திமுகவினா் சமத்துவப் பொங்கல் கொண்டாடினா்.

திருப்பலி: இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க பொங்கல் விழாவில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினரும் கொண்டுவந்த பொங்கல் பொருள்கள் திரு இருதய ஆண்டவா் பாதத்தில் வைத்து திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் வெளிநாடுகளில் வசிக்கும் கிளமெண்ட், எலியாஸ், ஸ்டீபன் காா்லா, இடா கேத்ரின், ஜெரால்டு சுயிா், கிளிண்டன் டிராகன் ஆகியோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் செய்தாா்.

Dinamani
www.dinamani.com