மானாமதுரை நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியபப்ன் கென்னடி தலைமை வகித்தாா். இதையொட்டி, அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், பெண் ஊழியா்கள், பெண் வாா்டு உறுப்பினா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு நகா்மன்றத் தலைவா், ஆணையா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துப்புரவுப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாற்றுத்திறனாளி நியமன வாா்டு உறுப்பினா் புஷ்பராஜ், நகராட்சி பொறியாளா் பட்டுராஜன், துப்புரவு ஆய்வாளா் பாலமுருகன், மேலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
