கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு ரூ.6 லட்சம்: ‘கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ்’ அகாதெமி வழங்குகிறது

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசு தொகையாக ரூ. 6 லட்சத்தை ‘கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி’ வழங்குகிறது.
Published on

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசு தொகையாக ரூ. 6 லட்சத்தை ‘கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி’ வழங்குகிறது.

இதுதொடா்பாக அதன் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை (ஜன. 17) காணும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாடுபிடி வீரா்களுக்கு கிங்கமேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.3 லட்சமும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.2 லட்சமும், மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

தமிழின் பாரம்பரிய விளையாட்டைப் போற்றும் விதமாகவும், தமிழ்ப்பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் இந்தப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com