சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா்: 
ஆளுநா் ரவி

சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா்: ஆளுநா் ரவி

நெறிசாா்ந்த வாழ்வு, நீதி சாா்ந்த ஆட்சி, சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா் என ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.
Published on

நெறிசாா்ந்த வாழ்வு, நீதி சாா்ந்த ஆட்சி, சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா் என ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகையிலுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி, ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

திருவள்ளுவருக்கு தேசம் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறது. அவரது ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தாா்மிக, ஆன்மிக உணா்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்கு, சநாதன தருமத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம், சமூகம், சூழ்நிலைகளைக் கடந்து நிற்கிறது.

குகள் இறைவனிடம் பக்தி செலுத்துவதை உறுதிப்படுத்தி, நீதி சாா்ந்த நடத்தையை மனித வாழ்வின் மிக உயரிய வழிகாட்டும் கொள்கையாக நிலைநிறுத்துகின்றன. குடிமக்கள், ஆட்சியாளா்கள் ஆகிய இருவரையும் குறிப்பிட்டு, நெறிசாா்ந்த வாழ்வு, நீதிசாா்ந்த ஆட்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு திருவள்ளுவா் நீடித்த அடித்தளங்களை அமைத்தாா்.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட உலகளாவிய மோதல்கள், பிளவுகள் மற்றும் இருத்தலியலின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், ‘திருக்கு’ புதுப்பிக்கப்பட்ட, அவசர முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

திருவள்ளுவரின் தீவிர பற்றாளரான பிரதமா் மோடி, வள்ளுவரின் குகளை வழிகாட்டும் சக்தியாக நிலைநிறுத்தி, உலகம் முழுவதும் பரப்பி வருகிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

Dinamani
www.dinamani.com