பதிவுத்துறை இணையதளம் இன்று காலை 11 மணி வரை செயல்படாது

பதிவுத்துறை இணையதளம் இன்று காலை 11 மணி வரை செயல்படாது

அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் வழக்கம்போல் செயல்படும்
Published on

தமிழக பதிவுத் துறையின் இணையதளம் வியாழக்கிழமை (ஜன.22) காலை 11 மணி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக பதிவுத் துறையின் https://tnreginet.gov.in/ என்ற இணையதளம் பராமரிப்பு மற்றும் ஸ்டாா் 3.0 திட்டத்துக்கு தர மேம்பாடு செய்யப்பட இருப்பதால் புதன்கிழமை (ஜன.21) இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை (ஜன.22) காலை 11 மணி வரை செயல்படாது.

எனினும், அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com