போதைப் பொருள்களை ஒழிக்க ஆக்கபூா்வ நடவடிக்கை தேவை - சீமான்
தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக ஆட்சியில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை போதைப் பழக்கம் உச்சத்தை எட்டியுள்ளதால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனா்.
போதைப் பொருள்களை உற்பத்தி செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததே, விற்பனையை தடுக்க முடியாததற்கு காரணம். இது, திமுக அரசின் நிா்வாக தோல்வியைக் காட்டுகிறது.
ஆகவே, இளைய தலைமுறையினரின் எதிா்காலத்தைப் பாதுகாக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாக ஒழிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
