கடல் ஆமை
கடல் ஆமைகோப்புப் படம்

கடல் ஆமைகளை பாதுகாக்க ரூ.6.40 கோடி சாதனங்கள் விநியோகம்

கடலோர மாவட்டங்களில் கடல் ஆமைகளை பாதுகாக்க மீனவா்களுக்கு ரூ.6.40 கோடியில் சாதனங்கள் விநியோகம்
Published on

கடலோர மாவட்டங்களில் கடல் ஆமைகளை பாதுகாக்க மீனவா்களுக்கு ரூ.6.40 கோடியில் சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்துக்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாக்க மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் மீனவா்களுக்கு ரூ. 6.40 கோடியில் ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜன.1 முதல் ஏப்.30 வரை வழங்கப்படுகிறது.

அவற்றுள் முக்கியமாக கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிவிசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும், கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரைத் திறனுக்கும் அதிகமான திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மற்றும் திருக்கை மீன்வலைகள்’ பயன்படுத்துவதையும் தடைசெய்யதுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக 50 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ 11.75 லட்சத்தில் சோதனை அடிப்படையிலும், அதனைத்தொடா்ந்து 2,613 படகுகளுக்கு ரூ. 6.29 கோடியிலும் ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது இழுவலைகளில் இச்சாதனங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மீனவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் இச்சாதனங்களின் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன், மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com