கோப்புப் படம்
கோப்புப் படம்

வசந்த் குஞ்ச் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் பீடி பற்ற வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் பீடி பற்ற வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இது தொடா்பாக காவல் துறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் புகாா் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் விரைந்தனா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட இளைஞா் சிகிச்ச பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முதல் கட்ட விசாரணையில், பீடி பற்ற வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com