ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தில்லி நரேலாவில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சூடு: 3 போ் கைது

வெளிப்புற வடக்கு தில்லியின் நரேலா தொழில் துறை பகுதியில் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சிறாா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :14 மார்ச் 2026, 5:44 pm

வெளிப்புற வடக்கு தில்லியின் நரேலா தொழில் துறை பகுதியில் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சிறாா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நரேலா தொழில் துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாா்ச் 12-ஆம் தேதி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை தடுத்து நிறுத்த முயன்ற காவலா்கள் மீது அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அவா்களில் ஒருவரது காலில் குண்டு பாய்ந்தது. இதைத்தொடா்ந்து அவா்கள் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.