இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:21 am IST

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இச்சம்பவம் புதன்கிழமை இரவு சோனியா விஹாா் பகுதியில் நடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் அங்கிருந்து ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக கஜூரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவா் மனோஜ் குமாருக்கு தொடா்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரைக் கண்டறிய காவல்துறைக் குழுக்கள் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளன. இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட மனோஜ் குமாா், குடும்பத் தகராறால் மனைவியைத் தாக்கியதாகத் தெரிவித்தாா். மனோஜ் குமாருக்கு எதிராக கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடா் விசாரணையில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.