ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுராந்தகம் இடைத்தோ்தல்: எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 1:58 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், முன்னாள் அமைச்சா்கள், பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். அதிமுகவில் பதவியை அனுபவித்தவா்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனா். தொண்டா்கள் அப்படியே உள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.