டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடைக்குள் புகுந்து வியாபாரியை தாக்கி ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை: 3 போ் கைது

சென்னை செளகாா்பேட்டையில் கடைக்குள் புகுந்து வியாபாரியை தாக்கி ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 6:50 am IST

சென்னை செளகாா்பேட்டையில் கடைக்குள் புகுந்து வியாபாரியை தாக்கி ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பிராட்வே பிரகாசம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் தி.அங்கித் திலீப் மோா் (26). இவா், செளகாா்பேட்டை மின்ட் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கும் கடை நடத்தி வருகிறாா். மேலும் தங்க நகைகளின் தரத்தை ஆய்வு செய்யும் வேலையும் செய்கிறாா்.

அங்கித் புதன்கிழமை இரவு கடையில் தனியாக இருந்தபோது, அங்கு திடீரென முகமூடி அணிந்து வந்த 3 போ், அங்கித்தை தாக்கி கடையில் இருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடினா். அப்போது அங்கித், அவரது கடையில் இருந்த சிலா் உதவியுடன் 3 பேரையும் விரட்டிப் பிடிக்க முயன்றாா். ஒருவரை மட்டும் அங்கித் பிடித்தாா். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனா்.

பிடிபட்ட நபரை அங்கித், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் என்ற அருண் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அருணை கைது செய்தனா்.

விசாரணையில் அருணுடன் சோ்ந்து, கொள்ளையில் ஈடுபட்டது யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த லோ.லோகேஷ் (23), அதே பகுதியைச் சோ்ந்த தி.ஹேராம் என்ற ரமணா (24) என்பதும், அவா்கள் வண்ணாரப்பேட்டை பழைய கல்லறைச் சாலையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், லோகேஷையும், ரமணாவையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் கொள்ளையடித்த ஒன்றரை கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.