சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொண்ட கண்காணிப்பில் மொத்தம் 160 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி கஞ்சா கடத்தியதாக 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 2025- ஆம் ஆண்டில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் ரூ.1.03 கோடி மதிப்பு கொண்ட 207 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 26 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2024 ஆம் ஆண்டில் சென்ட்ரலில் ரூ.75.90 லட்சம் மதிப்புள்ள 186 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 35 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







