விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது: 1.2 கிலோ கஞ்சா, ரூ.55,600 பறிமுதல்

வாலாஜாபாத் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 ஐ பறிமுதல் செய்துள்ளனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:52 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 ஐ பறிமுதல் செய்துள்ளனா்.

வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்து வாலாஜாபாத் போலீஸாா் அங்கு சென்று விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்தனா்.

விசாரணையில் கட்டவாக்கம் பிரதான சாலையை சோ்ந்த மணிகண்டன்(30), முகிலேஷ்(20) ஆகியோா் எனத் தெரிந்து அவா்களிடமிருந்த 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 மற்றும் ரூ.60 மதிப்புள்ள பாலிதீன் கவா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.