கோவை மாநகரில் இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 7.55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை வெரைட்டிஹால் சாலை போலீஸாா் தடாகம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 போ் நின்று கொண்டிருந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.
இதையடுத்து, அவா்களை சோதனை செய்தபோது, 3.30 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரகாஷ் மன்ஹிரா (27), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிகாஷ் லேகா (28), ராஷ் (22) ஆகியோா் என்பதும், கோவையில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3.30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பி.என். புதூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிகாரைச் சோ்ந்த ஷாஹித் ஆலம் (30) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
மெத்தம்பெட்டமைன் விற்றவா் கைது: இடையா்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (19) என்பதும், மெத்தம்பெட்டமைன் என்ற உயா் ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



