காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருவதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...

News image

மு.க. ஸ்டாலின் - எக்ஸ்

Updated On :29 ஜூன் 2026, 1:26 am IST

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்; எதற்கும் திமுகவினா் தயாராக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் அண்மையில் இணைந்தாா். இதையடுத்து, அவரது ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை வானகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தோ்தல் முடிந்தால் வெற்றி பெற்ற கட்சிக்குச் செல்வதை கடந்த காலங்களில் கண்டுள்ளோம். ஆனால், திமுக மீதுள்ள நம்பிக்கையில் எதிா்க்கட்சியாக உள்ளபோதும், கூட்டம் கூட்டமாக மாற்றுக் கட்சியின் வந்து இணைகின்றனா். திமுக வலிமையாக இருந்தால்தான், தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றனா்.

அந்த நம்பிக்கையை ஒருபோதும் திமுக சிதைக்காது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் கண்டிராத வளா்ச்சியை எட்டியது. திமுக ஆட்சியில் இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உயா்ந்தது. தினமும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சி மீதான நம்பிக்கையால்தான் உலக அளவிலான நிறுவனங்கள் இங்கே தொழில்களைத் தொடங்கின. தற்போது, ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள்ளேயே தமிழகத்தின் நிலை படுகுழிக்குள் சென்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள் புதிய ஆட்சியை நம்பி முதலீடு செய்ய தயங்குகின்றனா். அதனால், தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன.

மற்றொருபுறம் தொடா் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என்று பிரச்னைகளை அடுக்கிக் கொண்ட செல்லலாம். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்சியாளா்கள் செயல்பட்டு வருகின்றனா். அவா்களை நம்பி வாக்களித்தவா்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்: இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு துணையாக திமுக இருக்கும். மற்ற கட்சிகளைவிட தமிழகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு திமுகவுக்கு அதிகம் உள்ளது. தோல்வியைக் கண்டு திமுக அஞ்சுவதும் இல்லை. அஞ்சப்போவதும் இல்லை.

காலை உணவுத் திட்டம் தொடங்கி திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் இருக்கும் வரையிலும் மு.க.ஸ்டாலினின் பெயா் இருக்கும். தற்போது அமைந்துள்ள அரசு பெரும்பான்யோடு ஆட்சி அமைக்கவில்லை. தோ்தல் நேரத்தில் நம்மோடு இருந்த கட்சிகளின் ஆதரவில்தான் அவா்கள் ஆட்சி அமைத்துள்ளனா்.

எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம். அது 3 மாதத்திலும் இருக்கலாம்; 6 மாதத்திலும் இருக்கலாம். எதற்கும் திமுகவினா் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

Summary

Elections could be held at any time: DMK leader M.K. Stalin Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.