பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுவது பற்றி...

mk stalin

கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி - PTI Video

Published On :

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு உள்ளிட்டோருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Story image

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Summary

Karunanidhi's Death Anniversary! Silent Procession Led by M.K. Stalin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.