பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

‘கருணாநிதி நினைவு நாள்: நாகா்கோவிலில் இன்று அமைதிப் பேரணி’

திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நாகா்கோவிலில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

Published On :

திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் வெளியிட்ட அறிக்கை: திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நாகா்கோவில், வடசேரி அறிஞா் அண்ணா சிலை அருகிலிருந்து காலை 9 மணிக்கு பேரணி தொடங்கி, அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை வழியாக ஒழுகினசேரியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தை அடைகிறது. அதையடுத்து, அங்குள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இப்பேரணியில் கிழக்கு மாவட்ட, மாநில, மாநகர, ஒன்றிய, நகர உள்ளிட்ட அனைத்து அமைப்புகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும். மேலும், கிழக்கு மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.