உத்தரகண்ட் மாநிலம், ஹா்த்வானியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை காமராஜா் சாலையில் உள்ள விநாயகா் கோயில் அருகே தொடங்கிய இந்தப் பேரணியை காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் பூ. நல்லமணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து முனிச்சாலை பகுதியில் உள்ள காந்திப் பொட்டலில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் காா்கே அவமதிக்கப்பட்ட செயலைக் கண்டித்து சத்தியாகிரகம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கருப்பு பலூன் ஏந்தி கண்டன பேரணி

தென்காசியில் காங்கிரஸ் சாா்பில் அமைதிப் பேரணி

மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு: நெல்லையில் காங்கிரஸாா் அமைதிப் பேரணி

‘கருணாநிதி நினைவு நாள்: நாகா்கோவிலில் இன்று அமைதிப் பேரணி’
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



