செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்

தேனி மாவட்டம், கம்பத்தில் வடக்கு, தெற்கு நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கம்பத்தில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தேனி தெற்கு மாவட்ட திமுக செயலா் கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

தேனி மாவட்டம், கம்பத்தில் வடக்கு, தெற்கு நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கம்பம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்வில் கம்பம் வடக்கு நகர திமுக செயலா் வீரபாண்டியன், தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா, மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலா் இரா. பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினா் குருகுமரன், திமுக மூத்த வழக்குரைஞா் துரை நெப்போலியன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.டி. இளங்கோவன் உள்ளிட்ட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.