பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கருணாநிதி நினைவு நாள்: மு.க. ஸ்டாலின் புகழாரம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

Former Chief Minister Karunanidhi's Death Anniversary

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை - X | MK Stalin

Published On :

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வர். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர்.

தமிழ்நாட்டின் முதல்வராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர். அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.

அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை.

கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் கருணாநிதி, உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று.

அவர்தான் நமக்கு எல்லாம்; அவரின்றி நாம் இல்லை" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி - X | MK Stalin

Summary

Former Chief Minister Karunanidhi's Death Anniversary: ​​M.K. Stalin Pays Tribute

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.