தமிழக மக்கள் அனைவரும் குளிர்சாதனப் (ஏசி) பேருந்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.
சேலத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
நலத்திட்டங்களை விரைவாக கொண்டுவருவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வரும்.
போக்குவரத்துத் துறை வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். வருவாயைப் பெருக்க வேண்டும், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நலனை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராமங்கள் அனைத்துமே இணைக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் முதன்மை கோரிக்கை. முதல்வர் செல்லும் அளவுக்கு பேருந்துகள் இருக்க வேண்டும். சமீபத்தில் பேருந்தில் முதல்வர் பயணித்ததை பார்த்திருப்பீர்கள்.
தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும். இனி வாங்கப்படும் பேருந்துகள் எல்லாம் ஏசி பேருந்துகளாக வாங்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.
அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் வருகின்றன. காத்திருந்து மருத்துவரை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அதை சரி செய்வதற்கான பணிகள் படிப்படியாக செய்யப்படும்.
இது மக்களுக்கான ஆட்சி. மக்கள் நலனுக்கான திட்டங்களும் பணிகளும் படிப்படியாக செய்து முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது!” EPS Vs அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
லோகேஷ் கனகராஜ் ஆக்சன் ஹீரோவாக வலம் வருவார்- இயக்குநர் பார்த்திபன்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government

‘என் குழந்தையிடம் பள்ளியை சுத்தம் செய்ய சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன்’... அமைச்சர் விஜய் தமிழன் பேச்சு!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



