லோகேஷ் கனகராஜ் ஆக்சன் ஹீரோவாக வலம் வருவார் என்று இயக்குநர் பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த 7-ஆம் தேதி வெளியான திரைப்படம் டிசி. இதில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக தனது முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் வருகின்றனர்.
மேலும் படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, கஸ்தூரி ராஜா, க்ரிஷ் தயாள் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு அனிருத் இசை மிகப்பெரிய பங்காற்றியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டிசி படத்தைப் பார்த்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
டிசி : இயக்குநர் & கமர்ஷியல் ஹீரோ லோகேஷ் கனகராஜ்
கடலில் சுனாமியாக,
காற்றில் சூராவளியாக,
வெயிலில் அக்னியாக,
மழையில் இடியுடன் கூடிய,
அதிரடி அட்டகாசமென-ஏற்கனவே
வர்த்தக இயக்குனர்- ஒரு
வெற்றி நாயகனாக
களம் கண்டிருக்கும்
லோcash கனகராஜ்
Highly paid Action hero-வாக வலம் வருவார்.
விரல்களில் plastic rose
உதடுகளில் real rose
சுமக்கும் புதூ நாயகி
காண்போர் : conquer !
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் திரைக்கதை அமைப்பு மற்றும் மேக்கிங் பாணி எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அனிருத்தின் இசையமைப்பில் D C R சூப்பர்!
D C R : (தினசரி வசூல்) என்று தெரித்துள்ளார்.
Summary
Director Parthiban praised Lokesh Kanagaraj, saying he will shine as an action hero.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








