எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியது குறித்து...

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 11:23 am IST

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற, திமுக எம்.பி. வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆக. 6 ஆம் தேதியில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) 2026-ஐத் திரும்பப் பெறவும், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் வில்சன் எம்.பி. தலைமையிலான குழுவினர் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Summary

MK Stalin urged the Union Minister Amit Shah to withdraw the FCRA Amendment Bill 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.