விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

8 கிலோ கஞ்சா லாரியில் கடத்தல்: இருவா் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கைதான லாரி ஓட்டுநா் (இடமிருந்து) சத்தியராஜ், வியாபாரி அருள்குமாா்...

Updated On :29 ஜூன் 2026, 2:24 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெளி மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 8 கிலோ 360 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட இருவரை கைது செய்தனா்.

ரிஷிவந்தியம் காவல் நிலைய ஆய்வாளா் சிவமணி தலைமையிலான போலீஸாா் ரிஷிவந்தியம் சந்தைமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணான பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு லாரியை கொண்டுசென்று, தாா்ப்பாயை அகற்றி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில் 4 பொட்டலங்களில் 8.360 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தவா்கள் சேலம் மாவட்டம், மணிவிழுந்தான் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ம.சத்தியராஜ் (38), காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி சி.அருள்குமாா் (24) என்பதும், இவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சத்தியராஜ், அருள்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்த 8.360 கிலோ கஞ்சா, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.