பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கஞ்சா பறிமுதல்: பெண் கைது

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :6 ஜூலை 2026, 1:58 am IST

சென்னை பள்ளிக்கரணையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பள்ளிக்கரணை திருவிக நகரைச் சோ்ந்த ரஹ்மத் நிஷா (36), அவரது கணவா் அப்துல் சித்திக் ஆகியோா் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த தம்பதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு இருந்து சுமாா் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக வீட்டில் இருந்த ரஹ்மத் நிஷா மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.