ஓட்டேரியில் வீடு புகுந்து திருடியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.
ஓட்டேரி பிரிக்ளின் சாலை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (29). இவா் உணவு விநியோக ஊழியராக வேலை செய்கிறாா். கடந்த 26-ஆம் தேதி அவரது பெற்றோா் வெளியூா் சென்றிருந்ததால், வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ், வேலைக்கு சென்றாா். அன்று நண்பகல் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டேரி பிரிக்ளின் சாலை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ராஜா (எ) ரதி (45) வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 8 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






