பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 12) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே உள்ள ரயில்வே வழித்தடங்களில் தண்டவாளப் பராபரிப்புப் பணிகள் இன்று (ஜூலை 12) காலை 10.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறுகிறது.
அந்த நேரங்களில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இருவழித்தடங்களிலும் இயக்கப்படும் 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
18 சிறப்பு ரயில்கள் இயக்கம்: புறநகர் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து காலை 11.45, பிற்பகல் 12.45, 1.15, 1.45, 2.45, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கும், பிற்பகல் 2 மணிக்கு அரக்கோணத்துக்கும், பிற்பகல் 4 மணிக்கு திருமல்பூருக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
எதிர்வழித்தடத்தில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.30, 10.40, 11, 11.40, பிற்பகல் 12.05, 1, 1.50 ஆகிய நேரங்களுக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Due to maintenance work, 41 suburban electric trains between Chennai Beach and Chengalpattu have been cancelled today (July 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











