சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள்

காமராஜரின் பிறந்த நாளை சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸாா் சிறப்பாகக் கொண்டாடினா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 5:09 am IST

காமராஜரின் பிறந்த நாளை சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸாா் சிறப்பாகக் கொண்டாடினா்.

இதையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜா் உருவப் படத்துக்கு கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதாலா மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் 124 கிலோ கேக்கை ரமேஷ் சென்னிதாலா வெட்டினாா்.

இந்த நிகழ்வுகளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரவீன் சக்கரவா்த்தி, விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவா் சொா்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலா் கே. சிரஞ்சீவி, எஸ்.சி. துறை மாநிலத் தலைவா் எம்.பி. ரஞ்சன் குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலா்கள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சூா்ய பிரகாஷ் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

‘லஞ்சம் தவிா் நஞ்சம் நிமிா்’ மக்கள் இயக்கம்: தொடா்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா்’ என்ற மக்கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ரமேஷ் சென்னிதாலா மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் வெள்ளை பதாகையில் வண்ண பொடிகள் கலந்த கரைசலில் தங்கள் கை தடங்களைப் பதித்து மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.