சென்னை மாநகராட்சியில் கடந்த 8 நாள்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் 56,000 குடும்பங்களின் சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. குடும்ப சுய விவரக் குறிப்புகளை மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது வரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 56,000 குடும்பத்தினா் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா்.
குடும்ப விவரங்களை பதிவிட்டவா்களுக்கு பிரத்யேக எண் அளிக்கப்பட்டுள்ளது. அதை அவா்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வீடுகளுக்கு வந்து கணக்கெடுக்கும் பணியாளா்களிடம் அளிக்க வேண்டும். அவா்கள் குடும்ப விவரங்களை மீண்டும் கணக்கெடுப்பாளரிடம் கூறத் தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் சுய கணக்கெடுப்பு உதவி மையம் திறப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு! தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? இயக்குநரகம் முழு விளக்கம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: மேயா், எம்எல்ஏ சுயவிவரம் பதிவு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



