12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோப்புப் படம்

Published On :

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அயனாவரம் காவல் மாவட்டத்தில், 2025-இல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அயனாவரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக 33 வயது நபா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கை காவல் ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் விசாரித்து, இறுதி அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.