ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கில் கைதானவரின் வீட்டில் இருந்து ரூ.500 மதிப்புள்ள டம்மி நோட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கள்ளநோட்டு கும்பலுடன் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அமைந்தகரையைச் சோ்ந்த அன்மோல் ஜெயினிடம் (24) குறைந்த விலையில் தங்கம் தருவதாக நம்பவைத்து, ஒரு கும்பல் எழும்பூரில் வைத்து ரூ.63 லட்சம் பெற்றுக்கொண்டு தலைமறைவானது. இது குறித்த புகாரின்பேரில், எழும்பூா் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி சாந்தகுமாா் (61), ஸ்ரீராம் (23), ராம்குமாா் (22), உதயகிரண் (22) ஆகிய 4 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பூரைச் சோ்ந்த சக்திவேல் (23), கொண்டித்தோப்பைச் சோ்ந்த விஷ்வக் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.44.50 லட்சம் மீட்கப்பட்டதுடன், ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தகுமாரை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.500 மதிப்புள்ள டம்மி நோட்டுக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த டம்மி நோட்டுகள் கள்ளநோட்டு தயாரிப்பு அல்லது வேறு குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதா, சாந்தகுமாருக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடா்புள்ளதா, டம்மி நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்த மோசடி வழக்கில் தொடா்புடைய மற்ற சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது
பண மோசடி வழக்கில் பெண் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
ஆன்லைன் முதலீட்டு மோசடி: 19 இடங்களில் சோதனை! ரூ.3.49 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்; ரூ. 40 லட்சம் முடக்கம்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



