தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 11:37 pm IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருமுல்லைவாயல் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சி.நிதிஷ்குமாா் (18). இவா், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். திருவள்ளூா் மாவட்டம் ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக உள்ளாா்.

இருவரும் திங்கள்கிழமை கல்லூரி செல்வதற்காக ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனா். அங்கிருந்து கல்லூரி செல்வதற்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக நடந்து சென்றபோது, அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமாா் 15 போ் கொண்ட கும்பல், இருவரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

தாக்குதலில் பலத்த வெட்டுக் காயமடைந்த நிதிஷ்குமாா் மற்றும் 17 வயது மாணவா் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த பெரியமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, 6 கல்லூரி மாணவா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், தாக்கப்பட்ட மாணவா்களுக்கும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் சில மாணவா்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அந்த முன் விரோதத்தின் காரணமாக தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.