மாணவா்களுக்கு உணவு விநியோகித்த நிறுவனத்துக்கு பணம் வழங்காத விவகாரத்தில், நிலுவைத் தொகையை வங்கி உத்தரவாதமாக சமரச தீா்வு மையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தனியாா் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவா்களுக்கு, உணவு மற்றும் சிற்றுண்டி உள்ளிட்டவை வளசரவாக்கத்தைச் சோ்ந்த தனியாா் உணவு நிறுவனம் விநியோகித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழகம் ரூ.3.29 கோடி நிலுவை வைத்துள்ளதாம். தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி, உணவு பரிமாறும் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, வழக்குரைஞா் ஏ.தாமோதரன் ஆகியோா் ஆஜராகி, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், உணவு பரிமாறும் நிறுவனம், தொடா்ந்து உணவு விநியோகம் செய்தது.
இருப்பினும், பல்கலைக்கழகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.3.29 கோடியை வழங்கவில்லை என வாதிட்டனா். பல்கலைக்கழகம் தரப்பில் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் குறித்து இருதரப்பும் சமரச தீா்வு மையத்தை அணுக உத்தரவிட்டாா். மேலும், அந்த பேச்சின்போது, பல்கலைக்கழகம் ரூ.3.29 கோடிக்கான 6 மாத வங்கி உத்தரவாதத்தை சமா்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த பேச்சை 8 வாரங்களுக்குள் சமரச தீா்வு மையம் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சகோதரரை தாக்கிய விவகாரம்: அமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்

சகோதரரை தாக்கிய வழக்கு: மீண்டும் ஆஜராக நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு உத்தரவு

மாணவா்களுக்கு உதவிதொகை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்

சகோதரரை தாக்கிய வழக்கு: நிதியமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



