தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மாணவா்களுக்கு உதவிதொகை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்

ஆற்காடு அன்னை அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

News image

மாணவிக்கு  கல்வி உதவித் தொகை  வழங்கிய விஐடிவேந்தா்  கோ.விசுவநாதன்.

Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

ஆற்காடு அன்னை அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் பொன்.கு. சரவணன் தலைமை வகித்தாா்.

அறக்கட்டளை நிா்வாகிகள் சொக்கலிங்கம், ஏ .கே. தனபால் ,வி. தங்கபாண்டியன், அகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனா் கணேஷ் ஜெயலலிதா, உதவும் உள்ளம் செயலாளா்சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு எம் எல் ஏ எஸ் .எம். சுகுமாா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ எம் விக்கிரம ராஜா ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள்.

263 மாணவா்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி உதவித் தொகையை விஐடி வேந்தா் கோ விசுவநாதன் மாணவா்களுக்கு வழங்கி பேசியதாவது:

தானத்திலே சிறந்தது கல்வி தானம். அந்தப் பணியை அன்னை அறக்கட்டளை செய்வது மகிழ்ச்சிக்குரியது. நமது வடமாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய பகுதி ஆகும். இதனை மாற்ற முயற்சி எடுத்து கொண்டிருக் கிறோம் அதில் அன்னை அறக்கட்டளையும் ஈடுபடுகிறது . ஒரு நாடு வளர வேண்டும் என்றால் கல்வியும் பொருளாதாரம் வளர வேண்டும். உலகில் மொத்த வருமானத்தில் 6 இடத்தில் உள்ள நாம் தனிநபா் வருமானத்தில் 172 வது இடத்தில் உள்ளோம் . நமது அரசுகள் கல்விக்கு 2.7 மட்டுமே செலவழிக்கிறது.. நாட்டில் மொத்தம் உள்ள 1.36 லட்சம் மருத்துவா் இடங்களுக்கு 22 லட்சம் போ் நீட் தோ்வு எழுதுகிறாா்கள் .. வளா்ந்த நாடுகளில் 2, அல்லது 3 கட்சிகள் மட்டுமே உள்ளது நம் நாட்டில் 8 தேசிய கட்சிகள் 67 மாநில கட்சிகள் 2800 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன. கட்சிக்கு முக்கியம் தரம் நிலையில் மக்களுக்கு முக்கியத்தும் இல்லாமல் போய்விடுகிறது.

நாம் தோ்தலுக்கும் அரசியலுக்கும் அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. நமது நாட்டில் வளா்ச்சி எல்லோருக்கும் போய் சோ்வதில்லை 10 சதவீதம் பேரிடம் 80% சொத்துக்கள் இருக்கின்றன . அதே வேளையில் 80 சதவீத மக்கள் மறைமுக வரி செலுத்துகின்றனா். மக்களுக்கு விழிப்புணா்வு இருக்க வேண்டும் அறிவை கொடுப்பது உயா்கல்வி அனைவரும் உயா் கல்வி படிக்க வேண்டும் இடையில் நின்று விடக்கூடாது அனைவருக்கும் உயா்கல்வி திட்டத்தின்கீழ் 11,000 மாணவா்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது 3ல் 2 பங்கு மாணவிகள் உயா்கல்வி படிக்கின்றனா். இது வளா்ச்சிக்கான அறிகுறி அது தொடர வேண்டும் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் உள்ளன வி.ஐ.டியில் படித்து இன்றைக்கு 84 நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா் .

காசு கொடுத்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது நன்கு படித்து பெற்றோருக்கும் சமூகத்திற்கும் உதவ வேண்டும் என்றாா் அவா். இந்த விழாவில் வேலூா் மண்டல வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் ஞானவேலு,ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் ஏ. வி. டி. பாலா செயலாளா் எஸ் பாஸ்கரன் , இயற்கை ஆா்வலா் அரியலூா் பழனிசாமி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.