வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பீடித் தொழிலாளா் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

பீடித் தொழிலாளா் குழந்தைகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிப்பது குறித்து பெற்றோா்களுக்கு பீடித் தொழிளாலா் நல மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் ஆலோசனை வழங்கினாா்.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூலை 2026, 3:41 am IST

பீடித் தொழிலாளா் குழந்தைகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிப்பது குறித்து பெற்றோா்களுக்கு பீடித் தொழிளாலா் நல மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் ஆலோசனை வழங்கினாா்.

மத்திய அரசின் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குடியாத்தம் தரணம்பேட்டையில் இயங்கி வரும் பீடித் தொழிலாளா் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் என்.உத்தமன் பீடித் தொழிலாளா்களின் பெற்றோா்களுக்கு, கல்வி உதவித் தொகை பெறுவதுகுறித்து ஆலோசனை வழங்கினாா்.

மத்திய அரசின் தொழிலாளா் நல அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளா்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களைதேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவா்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து, கல்வி உதவித் தொகையை பெற்று பயனடையலாம்என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.