டாஸ்மாக் கடைகளில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை விளம்பர பதாகைகள் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் கே.கௌரி கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கல்லீரல் தொடா்பாக மருத்துவ முகாம் நடத்தினேன்.
இந்த முகாம் மூலம் 59 சதவீதம் பேருக்கு கல்லீரல் தொடா்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மதுபானத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு இல்லாமல் தொடா்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு நோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனா்.
பண்ருட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகைகள் எதுவும் இல்லை. இது, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளுக்கு முரணானது.
எனவே, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை விளம்பரங்கள் வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி-நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா், டாஸ்மாக் நிறுவனம் ஆகியோா் பதிலளிக்க 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன, மஞ்சளில் ஈயமா? எப்படி சேர்கிறது? என்ன பாதிப்புகள் ஏற்படும்?

டாஸ்மாக் மது விற்பனையை தனியாா் மயமாக்க அரசு திட்டம்?
டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளியிட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



