நாம் உணவுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளில் ஈயம் (lead) கலந்திருப்பது குறித்தும், அது அறுவடைக்குப் பிறகான நடவடிக்கைகளின்போது சேர்வதாகவும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் புதிய ஆய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்தைகளில் விற்கப்படும் மஞ்சள் தூளில் உள்ள ஈயத்தின் செறிவு, அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல், கையாளுதல் அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் கலப்படம் ஆகியவற்றின் போது சேர்வதாகவும் டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற அமைப்பின் ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆனால், விளைச்சலின்போது ஈயம் சேர்வதில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பது விவசாயிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு உள்பட நாட்டின் ஆறு மாநிலங்களின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மஞ்சள் மாதிரிகளை சேகரித்து ஆய்வ நடத்தியதில், அதில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவில்தான் ஈயம் கலந்திருப்பதை உறுதி செய்திருக்கிறது. 13 பச்சை மஞ்சள் மாதிரிகளில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாதிரிகளும் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் (ICP-MS) சிறப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பரிசோதிக்கப்பட்டன. அனைத்து மாதிரிகளிலும் ஈயத்தின் (Lead) அளவானது, அளவிடக்கூடிய குறைந்தபட்ச வரம்பிற்குக் (LOQ - 0.05 mg/kg) குறைவான அளவிலிருந்து 1.87 மில்லி கிராம்/கிலோ கிராம் வரை இருந்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது, மஞ்சளுக்கான வரம்பாக நிர்ணயித்த 10 மி.கி/கி.கி-ஐ விடக் கணிசமாகக் குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வுகளின் மூலம், விளைவிக்கப்படும் மஞ்சளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாகவே ஈயம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், விற்பனைக்கு வரும் மஞ்சளில்தான் அதிகப்படியான ஈயம் இருப்பது, மஞ்சளைப் பதப்படுத்துவது, சந்தைப்படுத்துதல், மஞ்சளில் கலப்படங்களை சேர்க்கும்போதுதான், அதில் அதிகப்படியான ஈயம் சேர்கிறது என்றும், சந்தை மதிப்பைக் அதிகரிப்பதற்காக, நிறத்தைக் கூட்ட சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் இதற்கு அடிப்படையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விளைவிக்கும் மஞ்சளில் ஈயம் அளவோடுதான் இருக்கிறது, விளைவித்த மஞ்சளை அறுவடை செய்து, அதனை பதப்படுத்தி, சந்தைப்படுத்தும் போதுதான் மனிதர்களுக்கு அபாயத்தை அளிக்கும் வகையில் ஈயம் அதிகரிக்கிறது. எனவே, பதப்படுத்தி, பாக்கெட் செய்யும் பணிகளில் அதிக கண்காணிப்பு தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதனால் என்னவாகும்?
ஈயம் நரம்புகளில் சக்திவாய்ந்த நச்சுப் பொருளா மாறுகிறது. இது மனித உடலில் உள்ள ஏறக்குறைய அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. இதனால், குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் அதிகபட்ச அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்திய சமையலறைகளில் பெரும்பாலும் மஞ்சள் இல்லாத சமையலே இல்லை என்ற நிலையில், இனி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
Summary
What? Lead in turmeric powder? How does it get there? What are the harmful effects?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் 199 பேருக்கு டெங்கு பாதிப்பு

அருணாசல்: வெள்ளம்-நிலச்சரிவால் கடும் பாதிப்புகள்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளியிட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

டெங்கு, மலேரியா பாதிப்பு நிகழாண்டில் இதுவரை குறைவு: தில்லி மாநகராட்சி
விடியோக்கள்

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டம்!



