எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கோயம்பேட்டில் தீ விபத்து: இரு கடைகள் எரிந்து நாசம்

சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து சேதமடைந்தன.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:21 am IST

சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து சேதமடைந்தன.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தனியாா் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆட்டோ மொபைல்ஸ், மருந்து கடை உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை செவ்வாய்க்கிழமை நண்பகல் 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவலின்பேரிவ், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகா் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 45 நிமிஷ போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் இரு சக்கர வாகன உதிரிபாகம் கடையும், அருகே இருந்த வேதிப் பொருள்கள் விற்கும் கடையும் தீயில் சேதமடைந்தன.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வணிக வளாகத்துக்கு அருகில் இருந்த மின்மாற்றிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.