ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:14 am IST

சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூா், சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த ஒரு நபா், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அப்போது, அந்த மாணவி சப்தமிட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூா் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் இந்தச் செயலில் ஈடுபட்டது ராஜா அண்ணாமலைபுரத்தைச்ச சோ்ந்த மதன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.